சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்றவர்களைக் கடித்துக் குதறிய, அந்த சிறுமியின் நாய்….! கத்தியால் குத்தியும் காப்பாற்றப் போராடி, இறுதியில்……!

சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்றவர்களைக் கடித்துக் குதறிய, அந்த சிறுமியின் நாய்….! கத்தியால் குத்தியும் காப்பாற்றப் போராடி, இறுதியில்……!மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள கரீலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, இரவில், தன் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு, மளிகைப் பொருள் வாங்கச் சென்றுள்ளார்.அப்போது, அந்த வழியே சென்ற இரண்டு வாலிபர்கள், அந்த சிறுமியின் வாயைப் பொத்தித் துாக்கிக் கொண்டு போய், அருகில் இருந்த குடிசைக்குள் கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றனர்.அதனால், அந்த சிறுமி, அந்தக் காமுகர்களிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்ளப் போராடினார். பெரும் கூச்சல் இட்டார். அவரது, கூச்சலைக் கேட்டு, அடையாளம் கண்டு கொண்ட, அவர்கள் வீட்டில் வளரும் நாய், தன் எஜமானியைக் காப்பாற்றுவதற்கு வேகமாக வந்தது.தன் எஜமானியைப் பலாத்காரம் செய்ய முயன்ற அந்த வாலிபர்களைக் கடித்தது. அந்த இளைஞர்கள், தங்களிடம் வைத்திருந்த கத்தியால், அந்த நாயைக் குத்தினர். அதனால், அந்த நாயின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த காமுகர்களைக் கடித்துக் குதறியது.இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். அதனால், அந்த கயவர்கள், தப்பி விட்டனர்.இந்தத் தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுமியைப் பாலத்காரம் செய்ய முயன்ற, ஐசு அகிவார் (வயது 39) மற்றும் புனித் அகிவார் (வயது 24) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறுமியைக் காப்பாற்றிய அந்த நாய்க்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசுவாசத்திற்கு, இந்த ஜீவனை விட்டால், உலகில் வேறேதுமில்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*