திமுகவின் அடுத்த அதிரடி அறிவிப்பும் வெளியானது! விரைவாக நாள் குறித்த க.அன்பழகன்!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்றது. இன்று (14-8-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில்,  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், செயல் தலைவர் ஸ்டாலின்,  முதன்மை செயலாளர் துரைமுருகன், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேடையிலும், மற்ற நிர்வாகிகள் அவரவர் இருக்கையிலும் அமர்ந்து இருந்தனர்.கடந்த 50 வருடங்களாக திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது குறித்தும், கலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், கலந்து ஆலோசிப்பதற்காக இன்று செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.இந்நிலையில் திமுகவின் பொதுக்குழு வருகின்ற ஆகஸ்ட் 28 ஆம் தேதி பொதுக்குழு கூடும் என பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 30 ஆம் தேதி கலைஞருக்கு இரங்கல் கூட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *