தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தேர்தலில் சீட்டா? எனக்கா? அதிருப்தியில் நிர்வாகிகள்! அதிர்ச்சியில் இருக்கும் திமுக தலைமை!

By Admin - August 22nd, 2018

Tags : Category : Tamil News,

அண்மையில் சட்டமன்ற உறுப்பினர்களை இழந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வசமும், திருவாரூர் தொகுதி திமுக வசமும் இருந்தது. திருவாரூர்  தொகுதி என்பது முன்னாள் முதலவர் மறைந்த கருணாநிதி வெற்றி பெற்ற  தொகுதி என்பதால், அங்கு மீண்டும் வெல்ல வேண்டும் என்பதை திமுகவினர் இலக்காக வைத்துள்ளார்கள். வெற்றி பெற திமுக தலைமை தீவிர சிந்தனையில் இருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே அதிமுக, அமமுக கட்சியினர் தேர்தலை சந்திக்க திட்டத்துடன் தயாராகி விட்டனர்.  இந்நிலையில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகளிடையே உள்ளது. ஏனெனில் அந்த மாவட்டத்தில் உள்ள திமுகவினர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற ஆவலில் இருக்கிறர்கள். ஏற்கனவே தலைவர் நின்றதால் மட்டுமே அந்த மாவட்ட நிர்வாகிகள் தீவிர களப்பணி ஆற்றி வெற்றி பெற வைத்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் தொகிதியில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் அதற்கான செலவை கட்சி தலைமையே செய்யும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள். ஆனால் மற்ற மாவட்ட நிர்வாகிகளோ, கலைஞர் குடும்பத்துடன் தங்கள் நெருக்கத்தை அதிகரித்துக்கொள்ள ஒவ்வொரு வாரிசுகளுக்கும் ஆதரவாக பேசி வருகிறார்கள். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கூறுவதை உள்ளூர் நிர்வாகிகள் விரும்பவில்லை என தெரிகிறது.  அண்மையில் நடைபெற்ற திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், ‘‘திருவாரூர் தனக்கும் சொந்த தொகுதிதான். கருணாநிதி நின்றபோது திமுக வெற்றி பெற்றிருக்கலாம். இனி அது நடக்காது’’ என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். ஏற்கனவே திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள்  சசிகலா குடுமபத்தினருடன் தொடர்பில் இருப்பதால் திமுக தலைமை அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் அதிமுக தரப்பிலும் அமைச்சர்கள் பயங்கரமான போட்டி கொடுப்பார்கள் என்பதால் திமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஆலோசனையை பொதுக்குழு முடிந்த வேகத்தில் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இப்படி என்றால் திருப்பரங்குன்றத்திலோ வேட்பாளர்கள் யாருமே நிற்க தயாராக இல்லை என தெரிய வந்துள்ளது.  அந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருப்பதாலும், திருவாரூர் தொகுதியை போல இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் திமுக தலைமை செலவுகளை ஏற்க வாய்ப்பில்லை.  அதனால் போட்டியிடுபவர்  மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டும் அப்படியே வெற்றி பெற்றாலும் கூட மீதமுள்ள 2 ஆண்டுகள் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால் பலர் போட்டியிட தயங்குவதாகக் கூறப்படுகிறது.
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share