கடலூர் – நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் வெள்ளத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

கடலூர் – நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் வெள்ளத்தை நேற்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.வேளக்குடி, பெராம்பட்டு, பழையார், ஆச்சாள்புரம், நாதல்படுகை, முதலைமேடு திட்டு, மாங்கணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது:- கொள்ளிடத்தில் பெருவெள்ளம் ஓடும் நிலையில் – கடலூர், நாகை மாவட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அளிக்கப்படவில்லை. ஓடைகள், வாய்க்கால்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் – விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.வீராணம் ஏரி தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், வீராணத்தின் 30க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கல்களில் இன்னமும் தண்ணீர் திறக்கப்படாமல், விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன.கொள்ளிடத்தில் பெருவெள்ளம். அதன் அருகிலேயே நீரின்றி காய்ந்து கிடக்கும் – கடலூர், நாகை மாவட்ட விவசாய நிலங்கள் என்கிற அவலநிலையை திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளனர்.இப்படி டெல்டா மாவட்டங்கள் அழிந்து போவதுதான், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும், மணல்கொள்ளைக்கும் அவசியமான தேவைகள் போலிருக்கிறது!இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *