இபிஎஸ் – ஓபிஎஸ் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அடங்கிரும் – டிடிவி தினகரன் வேலூர் எழுச்சியுரை

டி.டி.வி.தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்கி இந்த புதிய கட்சியின் கூட்டங்களை தமிழகம் முழுவதும் தினகரன் நடத்தி வருகிறார்.

தினகரன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ஆளும் அதிமுகவினர் மிரண்டு போயுள்ளனர். மினகதன் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இபிஎஸ் வசம் உள்ள அக்கட்சியை விரைவில் மீட்போம் என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் வேலூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், பாலசுப்ரமணியன் தலைமை வகித்தனர்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய துணை பொதுச் செயலாளர் தினகரன் 18 எம்.எல்,ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்ததும், இந்த ஆட்சியில், ஆட்டம் போட்டவர்கள் அடங்கி விடுவார்கள் என தெரிவித்தார்.

ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில், ஆளும் கட்சியின், பண பலத்தை மீறி, என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதுபோன்றே, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும், அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் வெற்றி பெறும் என கூறினார்.

கருணாநிதி உள்ளவரை மட்டுமே, திருவாரூர் அவர் தொகுதி. நானும், அந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதை மக்கள் மறக்ந்து விட மாட்டார்கள் என்வும் தினகரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என முதலமைச்சர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் எதிர்ப்பால் தற்போது ஆலையை முடியுள்ளார். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*