முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா! பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!!

Tags : Category : TAMIL NEWS,

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது.   பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.  கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.   இதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது. 53,500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சம் ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அதேபோல் பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.


Share :