முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, பரிதாபமாக உயிரிழந்த 4 பேர்.!

Tags : Category : TAMIL NEWS,

இன்று கிரிஸ்டல் டவரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .மும்பை கிழக்கு தாதர் பகுதியில் உள்ள  ஹின்மாடா சினிமா திரையரங்குக்கு அருகே கிரிஸ்டல் டவர்  என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது .அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 12 வது மாடியில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது .இத்தகைய தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைக்க தீவிரமாக முயற்சி செய்தனர். இதற்கிடையே தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு 20 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3  பேர்  அறுவை சிகிச்சை பகுதியிலும்,16 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் . மேலும் ஒரு மூதாட்டி உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும்  மருத்துவமனையின் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தீயை  முற்றிலுமாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 


Share :