முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சற்றுமுன்: கொள்ளிடக்கரையில் உச்சகட்ட பதற்றம்.! ஊருக்குள் தண்ணி.!! ஆடு மாடுகளுடன் கரையில் தவிக்கும் மக்கள்.!!

Tags : Category : TAMIL NEWS,

தற்போது மேட்டூரில் இருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.   கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர் மழைப்பொழிவை அளித்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,25,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 75,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2.50 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், கரையோரம் உள்ள 11 மாவட்ட  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஒகேனக்கலுக்கு தற்போது சுமார் 2,50,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் 41வது நாளாக குளிக்க தொடர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் இயக்கவும் 9வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருச்சி முக்கொம்பில் உள்ள கதவணைக்கு தற்போது 2.50 லட்சம் கன அடி நீர் வரத்துள்ளது. கீழணையான அணைக்கரையில் இருந்து தற்போது 2.50 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலுக்கு திறந்துபடப்பட்டுள்ளது.இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வெள்ளூர் எனும் கிராமத்தில் கொள்ளிடக்கரையோரம் உள்ள மதகு வெள்ள நீரின் அழுத்தம் தாங்காமல் பிய்த்து கொண்டு ஊரின் உள்ளே புகுந்துள்ளது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது உடமைகளையும், கால்நடைகளையும் அழைத்து கொண்டு கொள்ளிடக்கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த கிராமத்தின் அருகில் தமிழக அரசு அமைத்த மணல் குவாரியால் தான், தற்போது இந்த நிலை வந்துள்ளதாக, அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்ன்றனர். மேலும் அந்த பகுதியில் ஆறு வளைந்து (”S” BEND) வருவதால் மணல் குவாரி அமைக்க கூடாது என, கடந்த வருடம் பாமக சார்பில் அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share :