முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி!

Tags : Category : TAMIL NEWS,

இந்தியாவின் பொற்கால ஆட்சியின் நாயகன், கார்கில் நாயகன், பொக்ரான் நாயகன் என பல பெயரால் புகழப்படும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 05.05 மணிக்கு காலமானார். இவருக்கு தற்போது வயது 93 ஆகும்.உடல்நல குறைவின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி , அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 05.05 மணிக்கு சிகிச்சைபலனின்றி வாஜ்பாய் காலமானதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில், அவரது உடல் நேற்று மாலையில் இருந்து கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்தில், முக்கிய தலைவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


Share :