இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு, ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து..!

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற தினம் தான் “சென்னை தினம்” ஆகும். பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.முதன்முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் “சென்னை தினம்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் மெட்ராஸ் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங் ட்வீட்டியுள்ளார்:கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேருபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோருஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேருபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோருஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் #MadrasDay @ChennaiIPL pic.twitter.com/pvtU5Fd9N5— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2018