முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நாடு முழுவதும் 1000 பேர் உயிரிழப்பு..!  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்..!! 

Tags : Category : TAMIL NEWS,

நாடு முழுவதும் நடப்பாண்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளா, உத்திரபிரதேசம் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில்  இயற்கை பேரிடா்கள் ஏற்பட்டால், மாநிலங்கள் உடனே இழப்பீடு கோருவதற்கு பதில்,  தங்களது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, இயற்கை போிடா் மேலாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம்  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை வெள்ளம் மற்றும் கனமழைக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கா்நாடகா 161, அஸ்ஸாமில் 46 பேரும், கேரளாவில் 387 பேரும் உயிரிழந்துள்ளனா். கேரளாவில் மழை வெள்ளத்தால்  54 லட்சம் மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14.52 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


Share :