மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா சரண்

கோவை,கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). தொழில் அதிபரான இவர் கோவை ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளம்பெண்கள் தங்கி இருந்தனர்.

இந்த விடுதியில் பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி இருந்த மாணவிகளை தனியார் ஓட்டலுக்கு அழைத்துச்சென்ற புனிதா, அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் சிலரிடம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி அவர்களை தவறான பாதைக்கு அழைத்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்த னர்.

அதன்பேரில் போலீசார் கடந்த 23–ந் தேதி ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

மேலும் காணாமல் போன புனிதாவை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் மூணாறு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் அந்தப்பகுதிகளில் முகாமிட்டு கர்நாடக, கேரள போலீசாரின் உதவியுடன் புனிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விடுதி காப்பாளர் புனிதா. கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *