டிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் – சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்

சென்னை:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யயும்படி உத்தரவிட்டனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை தொடங்க உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் டிவிஎஸ் நிறுவன தலைவருமான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்தது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் வேணு சீனிவாசனை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IdolMissingCase #TVSMotorsChairman

Related Tags :

ஸ்ரீரங்கம் கோவில் |
சிலை மாயம் |
டிவிஎஸ் வேணு சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *