ஆம் ஆத்மி கட்சியிலிருந்து முக்கிய தலைவர் விலகல்! கட்சியினர் அதிர்ச்சி!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆம் ஆத்மி. இந்த கட்சியின் முக்கிய தலைவராக இருப்பவர் ஆஷிஷ் கேதன். இவர் இன்று  கட்சியிலிருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார். பத்திரிகையாளராக  பயணத்தை தொடங்கிய ஆஷிஷ் கேதன்  அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றினார். அவர் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். இந்நிலையில், இன்று விலகல் அறிவிப்பை வெளியிட்ட அவர்  கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன், குடும்பம் மற்றும் நண்பர்கள் கருத்தை கேட்ட பின்னர் தற்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என கேதன் அறிவித்தார். அண்மையில், மற்றொரு முக்கிய தலைவரான அசுதோஸ் விலகிய நிலையில், கேதனும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*