முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

முழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் ?

Tags : Category : TAMIL NEWS,

டென்மார்க்கில் உள்ள போரோ என்ற தீவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்களை கொன்று குவித்ததால் அதன் ரத்தம் கடலில் கலந்து ரத்த கடலாக மாறிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள ஒரு தீவில் வாழும் 5 வயது முதல் முதியவர்கள் வரை அனைவரும் கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கரைக்கு கொண்டு வந்து கொல்லும் வழக்கத்தை திருவிழாவாக கொண்டாடுவது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது . இதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கடலுக்குச் சென்று திமிங்கலங்களை கரைக்கு இழுத்து வருகின்றனர்.பின்னர் அவைகளை வெட்டி  குவித்து கொண்டாடி வருகின்றனர்.மேலும் எதிர்காலத்தில் குளிர்காலத்திற்கு தேவையான உணவை சேகரிக்கும் நோக்கிலேயே இந்த திருவிழாக்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் விலங்குகள் ஆர்வலர்கள் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல்  மக்கள் இதனை வாடிக்கையாக தொடர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 150 திமிங்கிலங்களை மக்கள் கொன்று குவித்துள்ளனர் .தங்களது உணவுக்காக வேறு நாடுகளை தேடி போக வேண்டிய நிலை வேண்டாம் என்பதாலேயே காலம் காலமாக  நாங்கள் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.   மேலும் அங்கு வெட்டப்பட்ட திமிங்கிலத்தின் ரத்தம் கடலில் கலந்து கடற்பகுதியே ரத்த சிவப்பாக காட்சிதரும் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Share :