திருப்பரங்குன்றத்தில் அதிமுக கட்சி சார்பில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சீனிவாசன்,

திருப்பரங்குன்றத்தில் அதிமுக கட்சி சார்பில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சீனிவாசன்,கருணாநிதி அடக்கம் செய்யும் இடம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றம் சென்றிருக்கலாம்.மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் பழனிச்சாமி நடந்து கொண்டார். கருணாநிதிக்கு ராணுவ மரியாதை, 7 நாட்கள் அரசு துக்கம் அறிவித்தவர் முதல்வர்.தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது.முதல்வர் பழனிச்சாமியின் 17 மாத ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போதும் வரலாம். தொண்டர்கள், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.கடந்த இடைத்தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளான மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம், பஸ்போர்ட் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.இன்னும் 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றுவோம், என்றார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார் முதலமைச்சர் பழனிசாமிக்குள் ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்திருக்கும் என்றும் எண்ணுவதாக கூறியுள்ளார்.மேலும், எடப்பாடியின் செயல்பாடுகளை வைத்து பார்த்தால் முன்னர் இருந்த எடப்பாடிக்கும், இப்போதைய முதல்வராக உள்ள எடப்பாடிக்கும் நிறைய மாற்றம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*