கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


விவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள். அவர்கள் சதியை முறியடித்தாரா என்பதை பற்றிய படம் தான். இதில் ஒருகாட்சியில் உயர்சமூகம் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி கமலை குறை சொல்லும்விதத்தில் பேசுவார். ஏன் அவசரப்பட்டு சுட்டீர்கள். விவேகத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்று சொல்ல வருவார்.

விவேகம் என்ற சொல்லை அவர் ஒவ்வொரு முறை சொல்லவரும்போதும் கமலும், ஆண்ட்ரியாவும் காபி வேணுமா என்று தடுத்து நிறுத்துவார்கள். இதை சிலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இது எதேச்சையாகத்தான் நடந்திருக்க வேண்டும். ஏனெனில் விஸ்வரூபம் இரண்டு பாகமும் 2013 லேயே தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *