கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


விஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை! கொதித்தெழுந்த கமல்ஹாசன்

கமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகமாக எடுத்து வைத்து வருகிறார். அதனை மக்களும் ஏற்கிறார்கள். ரசிக்கிறார்கள். அவரை அந்த தளத்திலும் வரவேண்டும் என நினைப்பதை காண முடிகிறது. ஆதரவுகள் பெருகி வருகிறது. அதே நேரத்தில் அவருக்கு பல தடைகளும் இருக்கிறது. அண்மையில் அவர் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வெளியாகியுள்ளது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாவதை தடை செய்ய முடியாது என நீதிமன்றமே கூறிவிட்டது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும் சென்னையில் நல்ல ஓப்பனிங். ஆனால் ஒரு சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிக வளாகம் ஒன்றில் கமல் படத்தை பார்த்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பல மாவட்டங்களில் படத்தை வெளியிடாமல் சிலர் தடை செய்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். திரைப்படங்கள் மூலமாக கட்சிக்கொள்கையை முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *