முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கேரளாவுக்கு 1 கோடி நிவாரணம்..! பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு ..!!

Tags : Category : TAMIL NEWS,

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது.   பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.  கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.    இதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது.  ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சன்தொலைக்காட்சி நிறுவனம் கேரளாவுக்கு 1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.  


Share :