கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்திய விமான படை சார்பாக ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

 ஆகஸ்டு 8 ஆம் தேதியில் இருந்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத மழையால், கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.  தொடர்வண்டி போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என அனைத்தும் முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.    கனமழையால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர்.  மீட்பு படையினர்  காணாமல் போனவர்களையும், மண்சரிவில் சிக்கி உள்ளவர்களையும் மீட்டு வருகின்றனர்.   இதனிடையே,  கடும் கனமழையால் கேரளா தொடர்ந்து தத்தளித்து வருவதால், கேரளாவுக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.  இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கேரளவுக்கு போட்டி போட்டு கொண்டு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்திய விமான படை சார்பாக ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*