தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

முழு சம்பளத்தை கேரள மக்களுக்கு நிதியுதவியாக வழங்கிய பிரபல கவர்ச்சி நடிகை..!

By Admin - August 21st, 2018

Tags : Category : Tamil News,

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.  தொடர்வண்டி போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என அனைத்தும் முற்றிலும் முடங்கியது.  கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3.3 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  பலர் காணாமல் போய்விட்டனர்.  மீட்பு படையினர் இவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே,  கடும் கனமழையால் கேரளா தொடர்ந்து தத்தளித்து வருவதால், கேரளாவுக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.  இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிவாரண பொருட்களும்,  நிதி உதவியும் அளித்து வருகின்றன.இந்நிலையில், பிரபல மும்பை நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், விஜய்சேதுபதி 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?