கங்குலியின் சாதனையை முறியடித்த கோலி! விரைவில் தோனியின் சாதனையையும் முந்துகிறார்!

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிபெற 521 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி கேப்டனாக 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதற்குமுன் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாக கங்குலி 21 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளார். முதல் இடத்தில் முன்னாள் கேப்டன் டோனி 27 வெற்றிகளுடன் உள்ளார். விரைவில் அதனையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *