தமிழகத்தில் கோலமாவு கோகிலா வசூல் தெரியுமா?

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளாா். இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, பிரபல தொகுப்பாளினி ஜேக்லின், நவீன் குமாா் உள்ளிட்ட பலா் நடித்து உள்ளனர்.  அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல் ஒன்று 37 லட்சம் பாா்வையாளா்களையும் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து உள்ளது. இப்படத்திற்கு ரசிகா்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் யோகி பாபு, நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பது போல் படத்தில் அமைந்துள்ளது. மேலும், கோலமாவு கோகிலா திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *