முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

திமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு

Tags : DMK, Karunanidhi Wealth, Karunanthi, Markandey Katju, MK Stalin, Category : TAMIL NEWS,

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.கருணாநிதி உடல்நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்.நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர். Many Tamilians r sympathising with Karunanidhi hu is hospitalised.But de shud also be asked :what were his assets before he entered politics,& wot r his assets&those of his wives,Stalin,Kanimozhi,Marans & other family members now ?When Kamaraj died he had nothing.What a contrast!
— Markandey Katju (@mkatju) July 30, 2018இவ்வாறாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.`மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன? அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன? காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு’ என்று குறிப்பிட்டுள்ளார். Many Tamilians are sympathising with Karunanidhi who is hospitalised. But they should also be asked: what were his assets before he entered politics, and what are his assets and his family members now?
When Kamaraj died he had nothing. What a contrast!https://t.co/9Cbolrf9Chpic.twitter.com/daJ71mkXRi
— Markandey Katju (@mkatju) July 31, 2018முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைதளத்தில் மார்கண்டேய கட்ஜு கருத்து பதிவிட்டார். அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் என்றும், தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளத்தில் கட்ஜு கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விவாதம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க​து. #Karunanthi #MarkandeyKatju

Related Tags :

Karunanthi |
MK Stalin |
DMK |
Markandey Katju |
கருணாநிதி |
மார்கண்டேய கட்ஜு |
மு.க.ஸ்டாலின் |
திமுக


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts