முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

மேட்டூரில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி வெளியேற்றம்.!! கொள்ளிடக்கரையில் மக்கள் வெளியேற்றம்.!!

Tags : Category : TAMIL NEWS,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர் மழைப்பொழிவை அளித்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,25,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 75,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், கரையோரம் உள்ள 12 மாவட்ட  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஒகேனக்கலுக்கு தற்போது சுமார் 2,25,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் 41வது நாளாக குளிக்க தொடர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் இயக்கவும் 9வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருச்சி முக்கொம்பில் உள்ள கதவணைக்கு தற்போது 2.34 லட்சம் கன அடி நீர் வரத்துள்ளது. கீழணையான அணைக்கரையில் இருந்து தற்போது 1.75 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலுக்கு திறந்துபடப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது, (18.08.2018) மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1.95 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.05 அடியாகவும், நீர்இருப்பு 93.55 டிஎம்சி-யாகவும் உள்ளது. இதனிடையே, இன்று கொள்ளிடம் ஆற்றில் இருந்து 3 லட்சம் கனஅடி நீர் திறந்துவிட போவதாக தமிழக அமைச்சர் சம்பத் நேற்று மாலை 6 மணிக்கு தெரிவித்தார். இதனால், கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் சம்பத் அறிவுறுத்தல் செய்துள்ளார்.


Share :