கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினி : அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னைதமிழ் திரையுலகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் , யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. அ.தி.மு.க. ஆண்டு விழாவுக்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள். பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். ஏன் என்றால் அ.தி.மு.க. உருவானது டாக்டர் கலைஞரால்.

நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படம். சிவாஜியை சூப்பர் ஸ்டாராக்கியதும் கலைஞரின் பராசக்திதான்.21 குண்டுகள் முழங்க முப்படை தலைவர்கள் மரியாதை அளித்தனர். அதில் ஒரே ஒரு குறை. கவர்னரில் இருந்து எல்லா மாநில முதல்-அமைச்சர்கள் வந்தனர். பிரதமர் வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2, 3 மணி நேரம் காத்திருந்தார்.

ஆனால் தமிழ்நாட்டின் முதல் பிரஜை முதல்-அமைச்சர் அங்கு வரவேண்டாமா? மந்திரிசபையே அங்கு இருக்கக்கூடாதா? இதை பார்த்த மக்கள் என்ன நினைப்பார்கள்.நீங்களெல்லாம் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? அப்போது ஜாம்பவான்கள் இருந்தார்கள். இப்போது இல்லை  என பேசினார் இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது;-நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது. ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது. ரஜினிக்கு தமிழக அரசியல் வரலாறு தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவர் இப்படி பேசி இருந்தால் நடமாடி இருக்க முடியுமா? கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினி. நினைவேந்தல் நிகழ்ச்சியை முழு நேர அரசியல்வாதியாக மாற பயன்படுத்தி உள்ளார்.

எம்.ஜிஆரின், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசி இருக்ககூடாது.மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது.  5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தான் மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்றோம். ரஜினிகாந்தின் சந்தர்ப்ப அரசியல் இங்கு எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*