முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த 40 குரங்குகள்..! சாதுரியமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள்..!

Tags : Category : TAMIL NEWS,

மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தற்போது வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இதனால் தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள அய்யாநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் அதிக தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள ஒரு மரத்தில் குரங்குகள் ஏறி விளையாடி கொண்டிருந்தன.இந்தநிலையில் வெள்ளம் அதிகரித்து மரத்தை சூழ்ந்ததால் மரத்தை விட்டு இறங்க முடியாமல் குரங்குகள் தவித்தன. 40 குரங்குகள் 2 நாட்களாக மரத்தில் இருந்து அங்குமிங்கும் பார்த்தப்படியே பரிதாபமாக தவித்துகொண்டிருந்தன.இது குறித்து, அப்பகுதி பொது மக்கள் கும்பகோணம் சப்- கலெக்டர் பிரதீப் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர், சப்- கலெக்டர் பிரதீப் குமாரின் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், வனத்துறையினர் அந்த மரத்தின் மீது ஒரு மூங்கில் மரத்தை போட்டனர். அதன் மூலமாக குரங்குகள் ஏறி அங்கிருந்து தாவி கரைக்கு சென்றன.மரத்தில் தவித்த குரங்குகளை சாதுரியமாக மீட்ட வனத்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.


Share :