கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


திடீர் பரபரப்பு.! நெல்லையில் திடீர் விசிட் அடித்த மஹேந்திரசிங் தோனி.!! அருவியில் போட்ட ஆட்டம்.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும், தமிழகத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது .சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போது வரை கேப்டனாக உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.காவிரி பிரச்சினைக்காக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் ஆட முடியாத சூழ்நிலை உருவாகிறது. அப்போது, மகேந்திர சிங் தோனி தமிழகத்தையும், தமிழர்களையும் ரொமப மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார்.தமிழர்கள் ”தல” என்ற பெயரையும் தோனிக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில்,  நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குண்டாறு அருகே உள்ள ஒரு அருவியில்   தோனி குளிக்க வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தற்போது தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நெல்லையில் நடைபெறும் கோவை மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடங்கி வைப்பதற்காக தோனி நெல்லை வந்துள்ளார்.இதற்கிடையே குண்டாறு அருகில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான அருவியில் குளித்துளார். மகேந்திரசிங் தோனி நெல்லை வந்த விடயம் தீய பரவ, தோனியை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.தோனியை பார்த்ததும் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் தங்கள் கையிலுள்ள செல்போனில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், தோனி, தல என்று கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *