முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் கேரளாவில் தொடங்கியதில் இருந்து இன்னும் அதன் தீவிரத்தன்மை குறையவில்லை.

Tags : Category : TAMIL NEWS,

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் கேரளாவில் தொடங்கியதில் இருந்து இன்னும் அதன் தீவிரத்தன்மை குறையவில்லை.தென்மேற்கு பருவமழை என்றாலே மேற்கு தொடர்ச்சி மலைக்கு மேற்கு பகுதியில் உள்ள  கேரளாவிற்கும், வடபகுதியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கும் அதிக மழைபொழிவை கொடுக்கும்.ஆனால் இந்த முறை கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.இதன்  காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக இதில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் அடங்கும்.இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு  இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது.தற்போது கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் அப்படியே தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. இதன்  காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் மழைப்பொழிவு மிகுந்த அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share :