நயன்தாராவின் விஸ்வரூபம்! மொத்த திரையுலகமும் எதிர்நோக்கும் ஒரு தருணம்

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டார். ஐயா படம் மூலம் அறிமுகமானவர் பில்லா படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்து ஹிட்டடித்தார்.

அதே வேளையில் தெலுங்கிலும் அவர் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின் என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தனர்.

கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்து அசத்தினார். இப்படம் தெலுங்கில் கோ கோ கோகிலா என வரும் ஆகஸ்ட் 31 ல் வெளியாகவுள்ளதாம். நயன்தாராவிற்கு தெலுங்கிலும் மார்க்கெட் அதிகம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*