தமிழகத்தில் இப்படியும் ஒரு அதிகாரியா? இன்னும் செய்ய வேண்டியதென்ன? எல்லாம் சாமிக்கே வெளிச்சம்! ( இறுதி பகுதி )

2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்களை தயாரிப்பதற்கான குழுக்களின் கூட்டம் தற்போது தான் தொடங்கியுள்ளது. இன்னமும் எந்த வகுப்பிற்கும் பாடங்களேதும் பாடத்திட்டத்தின் படி இறுதி செய்யப்படவில்லை.நிலைமை இவ்வாறு இருக்கும் போது, இவரை அவசர அவசரமாக மாற்ற என்ன காரணம் இருக்க முடியும் இவர் நேர்மையாக ஊழலுக்கு அடிபணியாமல் செயல்படுகிறார் என்பதைத் தவிர?நீதிமன்றத்திற்கு யாரேனும் சென்றால் இது நீதிமன்ற அவமதிப்பு என ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இவருடன் சேர்த்து பல அதிகாரிகளையும் துறைகளை மாற்றி திட்டமிட்டு மாற்றம் செய்திருக்கிறார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. புதிய பாடப் புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டு முழுமையாக வெளிவந்த பிறகு இவரது துறையினை நீதிமன்ற ஆணையினை மதித்து மாற்றினாலென்ன?அதற்குள் ஏன் இந்த அவசரம்? இவர் யாருக்கு அப்படி இடையூறாக இருக்கிறார்? எவரது ஊழலுக்கு துணை போக மறுக்கிறார் என்பதெல்லாம் அந்த ‘சாமி’க்கே வெளிச்சம்!  …. தமிழகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல பாடத்திட்டங்களை வழங்க வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும், என்றே பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*