முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

வாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி! அவசர அவசரமாக புறப்பட்டார்!

Tags : Category : TAMIL NEWS,

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன. கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 80 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.    இதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.  ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் இறுதி ஊர்வலத்தில், மோடி பங்கேற்றார்.  வாஜ்பாயின் இறுதி சடங்கு முடிந்த உடன், தனி விமானம் மூலம் கேரளா விரைகிறார் மோடி. நாளை கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி பார்வை இடுவார் என தெரிகிறது. 


Share :