தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கேரளாவில் கடந்த மே மாதம் பருவமழை தொடங்கியது. கடந்த 8-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

By Admin - August 18th, 2018

Tags : Category : Tamil News,

கேரளாவில் கடந்த மே மாதம் பருவமழை தொடங்கியது. கடந்த 8-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.14 மாவட்டங்களிலும் நிற்காமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.அணைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால் அங்குள்ள 39 அணைகளும் நிரம்பி உள்ளன.35 அணைகளில் இருந்து அணைக்கு வரும்  உபரிநீர் அப்படியே  திறந்துவிடப்படுகிறது. இது  தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து  மக்கள் வசிக்கும் பகுதியை சூழ்ந்துகொண்டு வெள்ளக்காடாக்கி இருக்கிறது.இதனால் மொத்த மாநிலமும் தீவாக மாறியது போன்ற  சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல மலைப்பாங்கான மாவட்டங்களில் மழையின் காரணமாக தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், பார்க்கும் இடமெல்லாம் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.இதனால்ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரையில் மொத்தம் 331 வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டதாகவும், 2526 வீடுகள் பகுதி அளவு இடிந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதுபோக சுமார் 3200 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த பயிர்கள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.சாலைகள் வழி போக்குவரத்து  மற்றும் ரயில் தண்டவாளங்களில் மண் சரிந்து காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்தும் இருப்பதால் பஸ், ரயில் போக்குவரத்து முற்றாக  முடங்கி போயுள்ளது. உள்ளது.இதுவரை இல்லாத வகையில் கொச்சி மெட்ரோ ரயில் போக்குவரத்தும் பெரும் பாதிப்புகுள்ளாகி உள்ளது.கொச்சி விமான நிலையம் இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இப்போது 26ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுவரை மழையின் காரணமாக மட்டுமே  173 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் மட்டுமே 106 பேர் பலியாகி இருப்பது மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத பேரிடரில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை மீட்க நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.இந்திய விமானப்படையில் இருந்து சுமார் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. கூடவே மீனவ படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.இருந்த போதிலும் இன்னும் ஏராளமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை மீட்குமாறு சமூக வலைத்தளங்களில் உதவிகேட்டு கதறி வருகின்றனர்.இந்த நிலையில் விபரீதத்தை உணர்ந்த பிரதமர், நேற்று மாலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டார்.இன்று  மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள் என தெரிகிறது.பிரதமர் வர உள்ள நேரத்தில், இன்று மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கொடுத்துள்ளது.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?