ராஜஸ்தானில் இஸ்லாமிய பெயர் கொண்ட கிராமங்களின் பெயர்கள் மாற்றம்!

ராஜஸ்தானில் இஸ்லாமிய பெயர் கொண்ட கிராமங்களின் பெயர்கள் மாற்றம் #Rajasthan

ராஜஸ்தான் மாநில அரசு, இஸ்லாமிய பெயர் கொண்ட 8 கிராமங்களின் பெயர்களை மாற்றியிருக்கிறது.

இந்த பெயர் மாற்றுதல் நடவடிக்கைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதியளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு 27 கிராமங்களின் பெயர்களை மாற்றக் அனுமதி கோரியதாகவும், ஆனால், முதற்கட்டமாக, மத்திய உள்துறை அமைச்சகம், 8 கிராமங்களின் பெயர்களை மட்டுமே மாற்ற ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பார்மர்((Barmer)) மாவட்டத்தில் உள்ள மியோ கா பாரா((‘Miyon ka Bara’)) என்ற கிராமத்தின் பெயரில், மகேஷ் நகர்((‘Mahesh Nagar’)) என மாற்றப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன், மகேஷ் பாரா என்ற பெயரில் இந்த எல்லையோர கிராமம் அழைக்கப்பட்டதாகவும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், மியோன் கா பாரா என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்கள் பெருமளவில் இருப்பதால், இஸ்லாமிய கிராமங்களின் பெயர்களை மாற்றியிருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *