நானே போராட்டம் செய்திருப்பேன் , ரஜினி கிளப்பிய புதிய சர்ச்சை .!

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை,அவருக்கு மட்டும் மெரினாவில் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் நானே போராட்டம் செய்திருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.சென்னையில்  காமராஜர் அரங்கத்தில்  நடிகர் சங்கம் சார்பில்  கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பல நடிகர்கள்,நடிகைகள் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:தமிழகத்தில் 50 ஆண்டில் பல்வேறு சூழ்ச்சி மற்றும் துரோகங்களை தாண்டி  கட்சியை கட்டிக்காத்தவர் கருணாநிதி.கலைஞரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர் உள்ளனர்.மேலும் எம்ஜிஆரையும், சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியது கலைஞர் வசனம் தான், அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனெனில் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதிதான். கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட  பார்க்க முடியவில்லை. மேலும் கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம்கொடுக்காமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.மேலும் கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?. அமைச்சர்கள் வந்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*