திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..!

திருச்சி, பாலக்கரை மஞ்சக்கரை தெருவை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் திருச்சி கோர்ட் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது பையில் இருந்த பணத்தை எடுத்து பணம் சரியாக உள்ளதா என்று அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த வாலிபர், அவரின் பணத்தை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். சரவணன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமர்த்தியமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் செய்த விசாரணையில், அவர் குளித்தலை கோட்டைமேட்டை சேர்ந்த மகாலிங்கம் (32) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கனகராஜ் (45). இவர் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரின் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுத்துகொண்டு தப்பி ஓட முயற்சிசெய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட கனகராஜ் வாலிபரை மடக்கி பிடித்து அரியமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த நிக்கோலஸ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *