விக்ரம் நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படம், செப்டம்பர் மாதம் ரிலீஸாக இருக்கிறது

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தமீம்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த் த்ரிஷா இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்ததால், அவருக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜ் என இருவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, அடுத்த மாதம் (செப்டம்பர்) ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. சென்சார் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

செப்டம்பர் 13-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, 21-ம் தேதி விஷாலின் ‘சண்டக்கோழி 2’ என இரண்டு பெரிய படங்கள் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கின்றன. இதில், எந்தப் படத்துடன் ‘சாமி ஸ்கொயர்’ மோதப் போகிறது என்பது தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*