முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

உண்மையான உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள் என கூறிய கையோடு, அதிரடியாக செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையே மிரளும் அளவிற்கு பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.

Tags : Category : TAMIL NEWS,

கருணாநிதி இறப்புக்கு பிறகு அவரது நினைவிடத்திற்கு சென்ற அழகிரி, உண்மையான உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள் என கூறிய கையோடு, அதிரடியாக செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையே மிரளும் அளவிற்கு பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.இப்போது ஸ்டாலின் தான் தலைவர் என்பது உறுதியான நிலையில் என்னை கட்சியில் இணைக்கவில்லை என்றால் செப்டம்பர் 5 ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை குறித்து அறிவிப்பேன் என்று அழகிரி அறிவித்துள்ளார். இதுவரை என்னை திமுகவில் இணைப்பது போல தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.ஒரு பக்கம் அழகிரி முரண்டு பிடித்து பல அறிவிப்புகளை விடுத்தாலும், அனைத்தையும் முறியடிக்கும் நோக்கில், ஸ்டாலின் தரப்பு செயல்பட்டு வருகிறது.பேரணிக்காக அழகிரி திமுக அதிருப்தியாளர்கள், ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டிருக்கும் வேளையில் மாவட்ட செயலாளர்களிடத்தில் இருந்து தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார் ஸ்டாலின்.பேரணி நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டுள்ளார் அழகிரி. ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.அதேவேளை தி.மு.க மாவட்டச் செயலாளர்களை அழைத்த மு.க.ஸ்டாலின், ‘’ யாரும் பேரணிக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். யார் யார் அழகிரி பக்கம் போகிறார்கள் என்பதையும் கண்காணியுங்கள்’’ என உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனையும் விழுப்புரத்தில் பொன்முடிக்கு எதிரானவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழகிரி பேசிவருவதை அறிந்த ஸ்டாலின் அதற்கான நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்.இன்று காலை, முல்லைவேந்தன் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. போனை எடுத்திருக்கிறார். எதிர்முனையில் பபொருளாளர் துரைமுருகன். அப்போது தலைவர்தான் (ஸ்டாலின்) உங்ககிட்ட பேசச் சொன்னாரு.உன்னைப் பார்க்க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி வருவாரு. பாஞ்சாலி சபதம் முடிந்தது… என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்துவிட்டாராம் துரைமுருகன்.அவர் சொன்னபடியே அடுத்த சில மணி நேரத்தில், முல்லைவேந்தன் தோட்டத்துக்கு தர்மபுரி மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன் போயிருக்கிறார்.முல்லைக்கு சால்வை போட்ட கையோடு, யாருக்கோ போனையும் போட்டு அவர் கையில் கொடுத்திருக்கிறார். ‘நீங்க உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க. நாம தலைவரை சந்திக்கப் போகலாம்! என அழைத்திருக்கிறார். உடனே முல்லையும் கிளம்பிவிட்டார்.இப்படி அழகிரி யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசினாரோ அவர்களுக்கெல்லாம் ஸ்டாலின் தரப்பிலிருந்து உடனடியாக போனும் போகிறது. ஆளும் போகிறார்கள். இதுதான் அழகிரியை செம அப்செட் ஆக்கிவிட்டது.


Share :