கருணாநிதியை நலம் விசாரித்தார் தல அஜித்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார்..கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் வயது முடிவின் காரணமாக உடல்நலம் நலிவடைந்து கடந்த 5 நாட்களாக  தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தொண்டர்கள் பலரும் இரவு பகலாக காவேரி மருத்துவமனையின் முன் கலைஞரின் கை அசைவிற்காக காத்து கிடக்கின்றனர்.            இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினர் பலரும்  நேரில் சென்றும் தொலைப்பேசி வாயிலாகவும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்கு நேற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் இவரை தொடர்ந்து இன்று காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் .   இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

கருணாநிதியை நலம் விசாரித்தார் தல அஜித் | Thala Ajith Enquire Karunanidhi health at Kauvery Hospital


https://youtu.be/BOs8em6UO1E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *