முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அஜித்தின் விஸ்வாசம் 5 அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள்!

Tags : AJITH, THALA, VISWASAM, VISWASAM FIRST LOOK, Category : KOLLYWOOD NEWS,

அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கு 5 வசனகர்த்தாக்கள் பணிபுரிந்து, வசனங்களை எழுதியுள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். விவேகம் படத்தையடுத்து அஜித்தின் படமாக உருவாகிவருகிறது விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் என அஜித் – சிவா கூட்டணியின் நான்காவது படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.

முதன்முதலாக, டி.இமான் அஜித் நடிக்கும் படத்துக்கு இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை 2019 பொங்கலின் போது ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வியாழக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் விஸ்வாசம் பட போஸ்டர் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சிறுத்தை தொடங்கி விவேகம் வரையிலான சிவாவின் படங்களில், சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை திலீப்சுப்பராயன் மேற்கொண்டுள்ளார்.

மேலும் விஸ்வாசம் படத்தில் மொத்தம் ஐந்து பேர் வசனங்களை எழுதியுள்ளனர். இயக்குநர் சிவா, கே.மணிகண்டன், சபரி, பாக்யராஜ், சந்திரன் என ஐந்து பேர் கூட்டணியுடன், அஜித் – சிவாவின் நான்காவது படைப்பாக விஸ்வாசம் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. பொதுவாகவே, சிவாவின் படங்களில் வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் இருக்கும். வசனங்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பவர் சிவா. வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களிலும் அஜித்துக்கான பஞ்ச் வசனங்கள், ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு, கைத்தட்டல்களைப் பெற்றது நினைவிருக்கலாம். அவற்றில் பல வசனங்கள், இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில், டப்ஸ்மாஷ்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.


Share :

Related Posts