கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் திரு. பி. பத்மனாபன் வரவேற்று பேசியதுடன் கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகளை கூறினார். கல்லூரி இயக்குனர் முனைவர் ஐ. சுந்தரபாண்டி தலைமை உரையாற்றினார். முனைவர் திரு. என். நிர்மல்சிங் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சுpறப்பு விருந்தினராக முனைவர் எம்.கே. சூரப்பா (துணை வேந்தர்.அண்ணா பல்கலைகழகம்ää சென்னை) கலந்து கொண்டு 315 மாணவää மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் தமது பட்டமளிப்பு உரையில் கிராமப்புற மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டட வி வி பொறியியல் கல்லூரிக்கு வருகைத்தந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திராமல் மாற்று விதமாக சிந்தித்து சுய தொழில் செய்து மற்றவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கவேண்டும். சுவாமி விவேகானந்தாää இராமானுஜம் மற்றும் அறிவியல் அறிஞர்களின் சரித்திரத்தை தெரிந்துகொண்டு அதன் வழியில் பயனிக்கவேண்டும். மேலும் மாணவர்கள் புதவிதமான முயற்சிகளை மேற்கொண்டு கிராமங்களின் தரத்தை உயர்த்த முன்வரவேண்டும்ää நமது சுற்றுப்புறத்தை அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டும். இறுதியாக பட்டம் பெற்ற மாணவ மாணவிகளையும்ää அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தியதோடுää நல்ல உயர் கல்வி பயின்றும்ää தொழில் தொடங்கியும் இந்திய வளர்ச்சிக்கு முதகெலும்பாக மாணவர்கள் விழங்கவேண்டும் என கூறினார். அண்ணா பல்கலைகழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவää மாணவிகளுக்கு கல்லூரி செயலர் திரு. எஸ்.ஜெகதீசன்; தங்க நாணயம் பரிசாக வழங்கினார். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பி. பத்மநாபன் உறுதி மொழி வாசிக்கää மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இவ்விழாவிற்கு திரு.சு.ஜெகதீசன் தலைமை தாங்கினார்கள். திரு.ஜெ.சுப்புராஜன் முன்னிலை வகித்தார். பெற்றோர்கள் மற்றும் 300க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர்.என்.நிர்மல்சிங் செய்திருந்தார்.

விவி பொறியியல் கல்லூரி 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா | VV College of Engineering 4th Graduation Day


https://www.youtube.com/watch?v=UQytD3m2qGY

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *