தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து

By Admin - August 18th, 2018

Tags : Sasikala, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ. தி. மு. க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் அதிமுக அணிகள் ஒன்றிணைந்தன. அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா உள்ளார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தனது 61-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார். சிறையிலுள்ள பிற கைதிகளுக்கும் அவர் இனிப்புகளை வழங்கி சசிகலாவின் பிறந்தநாளை கொண்டாடினார். சசிகலாவின் பிறந்தநாள் என்பதால் அமமுக-வின் மாவட்ட செயலாளர்கள், கழக உறுப்பினர்கள்,தொண்டர்கள் என ஏராளமானோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன்பாக குவிந்துள்ளனர். TTV Dhinakaran extends his wishes to Sasikala for her birthday in bengaluru parappana agrahara prison

Related Posts

டிடிவி தினகரனின் புரட்சி பயணம்

# புரட்சிப்பயணம்… ************************** இவர் இனி புதியதாக பார்க்க வேண்டிய அதிகாரம் எதுவுமில்லை… ஒரு மாநில முதல்வரே, இவரின் முன்…

தினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்?

18 எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அரசியல் வாழ்க்கை முடிந்து போனது என நம்பிக் கொண்டிருந்த ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இன்று அதிர்ச்சி வைத்தியம்…

நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து…

பழனி-பன்னீரை உதற தயாராகும் எம்.பி.க்கள்

#மக்கள்செல்வர்தினகரன் #அவர்களைதூக்கிப்பிடித்த #கருத்துக்கணிப்பு! பழனி-பன்னீரை உதற தயாராகும் எம்.பி.க்கள்: டெல்லியில் நடக்கும் கில்லி மூவ்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சைலண்டாக…

சசிகலாவிற்கு பரோல்! தினகரனின் பயணத்திட்டங்கள் ரத்து!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவரும், ஆர்கே நகர் MLA தினகரனின் சித்தப்பாவுமான ம. நடராஜன் உடல்நலக்குறைவால்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?