சற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்!.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் மூத்த தலைவருமானவர் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி 93 வயது நிரம்பிய இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜூன் 11ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, நேற்று மாலை 5.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 

பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. மாலை 5 மணியளவில் டெல்லி யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு மற்றும் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*