முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.!!

Tags : Category : TAMIL NEWS,

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், சிறுநீரக கோளாறு காரணமாக, உடல் நல குறைவு ஏற்பட்டு, கடந்த 9 வாரங்களாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று மாலை 5.40 மணியளவில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி மாலை 5.05 மணிக்கு உயிர் இழந்ததாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இந்த செய்தி அரசியலுக்கும் அப்பாற்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்குநேற்று முதல் தற்போது வரை குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த வாஜ்பாய் உடலுக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், சற்றுமுன் அடல் பிஹாரி வாஜ்பாய் பூத உடல் ”ஸ்மிரிதி ஸ்தல்” என்ற பகுதியில் அவரது உடல், இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. 


Share :