முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இதுதான் சர்கார் படத்தின் கதையா?

Tags : SARKAR, THALAPATHY, VIJAY, Category : KOLLYWOOD NEWS,

வித்யாசமான கதைகளில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ள இயக்குனர் முருகதாஸ் தற்போது அரசியல் கதையுடன் சர்கார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தேர்தலின்போது தனது ஓட்டுரிமையை செலுத்த சொந்த ஊருக்கு வருகிறார்.

ஆனால் வரும் விமானம் தாமதம் ஆகிறது, சொந்த ஊர் சென்று பார்த்தால் அங்கு அவரது வாக்கை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் கள்ளஓட்டாக போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார்.

அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதித்து, சாக்கடையாக இருக்கும் அரசியலில் புரட்சி செய்கிறார்.

இதுதான் சர்கார் படக்கதை என கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் டீஸர் வரும் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று வெளியிடப்படவுள்ளது.


Share :

Related Posts