டபுள் ட்ரீட் கொடுத்த தல அஜித்..!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!  

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம் ” படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் “விஸ்வாசம் ” படத்தில் கைகோர்த்துள்ளார்.   இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார். நடிகர்அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள் என்பதால், சாய்பாபாவுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று அதிகாலை 3.40 மணிக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. We are excited to present to you #ViswasamFirstLook #Pongal2019 @directorsiva @SureshChandraa @immancomposer @AntonyLRuben @vetrivisuals @Actor_Vivek @DoneChannel1 pic.twitter.com/ez1cLQ7dnL— Sathya Jyothi Films (@SathyaJyothi_) August 22, 2018 இந்நிலையில், படத்தின் போஸ்டரை இயக்குனர் சிவா வெளியிட்டு ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளார்.  அது என்னவென்றால் ஒன்று, படத்தில் தல இரட்டை வேடம், இரண்டாவது, படம் அடுத்த ஆண்டு பொங்கல்  அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *