அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!!

இந்த வருடம் முன் கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கியது.தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தை பொறுத்தவரையில் கடரோர மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று (23.08.2018) வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.மேலும், தென் மேற்கு பருவமழையின் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாலை  மற்றும் இரவு நேரங்களில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*