முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இதயநோய் உள்ள சிறுமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!.

Tags : Category : TAMIL NEWS,

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கேரள மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனையடுத்து கேரளாவுக்கு பணம், உணவுபொருள்கள், உடைகள் என்று நாடுமுழுவதும் வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நிவாரண நிதியை அளித்துவருகின்றனர்.இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா  என்ற சிறுமி தனது இதய அறுவைசிகிச்சைக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.தமிழகத்தின் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன் – ஜோதிமணி இவர்களின் புதல்விதான் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி அட்சயா. இந்த சிறுமிக்கு இதயத்தில் பிரச்னை இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.கடந்த வருடம் இவரது நிலைமை மோசமானதால், உடனே அறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கரூரைச் சேர்ந்த லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என கூறும் சகாயம் ஐஏஎஸ் அவர்களை பின்பற்றும் ஒரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் செலவு செய்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வைத்திருக்கிறார்.மீண்டும் ஒரு வருடத்திற்குள் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு இரண்டரை லட்சம் வரை ஆகும் என்று கூறப்பட்டதால், மீண்டும் நிதி திரட்டினர்.இந்தநிலையில் கேரள வெள்ளப்பாதிப்பையும்,அங்கு மக்கள் தத்தளிப்பதையும் பார்த்து மனம் உறுகிய அட்சயா, தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காகக் கிடைத்த நன்கொடைப் பணத்தில் இருந்து ரூபாய் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி நெகிழவைத்துள்ளார்.


Share :