கொள்ளையடித்த வீட்டில் நல்ல உறக்கம்.! வீட்டின் உரிமையாளர் அலறியதால் மானைப்போல துள்ளி  ஓட்டம்.!!

 மதுரை மாவட்டம் உத்தங்குடி வளர் நகரைச் சார்ந்தவர் உதயகுமார் வயது31. இவர் மதுரை – மேலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளை ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உதயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் மேற்கூரையில் வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த அறைகளை சோதனை செய்ததில் நகைகள் ஏதும் இல்லை என்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தேடினர்., தேடியதில் 6 சவரன் நகை மட்டுமே கிடைத்தது. அதை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் கடும் களைப்பில் இருந்ததால் வீட்டிலேயே தூங்கினார்.சிறிது நேரத்தில் உதயகுமாரின் மனைவிக்கு தாக்கம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக மாடியில் இருந்து கீழே வந்தார் அப்போது, திருடர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை கவனித்த அவர் செய்வதறியாது திருடன்…திருடன்………..என்று அலறினார். இவரின் அலறலைக்கேட்ட அவர்கள் பதறிப்போய் உதயகுமாரின் மனைவியை தள்ளிவிட்டு 6 சவரன் நகையுடன் தப்பிச்சென்றனர்.திரைப்படத்தில் வரும் காமெடி போல் திருட்டு நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *