முதல்வர் தலைமையில் எம்.எல்.ஏ திருமணம்! மணப்பெண் மாயம்! நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன். அவருக்கு வயது  43 . இவரது சொந்த ஊர்  புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். அவருக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா என்ற 23 வயதான இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணம் வருகிற 12-ந்தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடக்க இருந்தது. திருமணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. .இந்த திருமணத்திற்கு பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் மணமகள் வீட்டிலும் உறவினர்களுக்கு கடந்த ஒரு வாரமாக  கொடுத்து வந்தனர். திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் மணமக்கள் வீடு கோலாகலமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள் சந்தியா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சந்தியா அவரது அக்கா வீட்டுக்கு போகாமல் மாயமாகி விட  கடந்த 2 நாட்களாக தேடிப்பார்த்துள்ளனர். கிடைக்காத காரணத்தால் சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். மாயமான சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவரை காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடன் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை கூறியுள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் மாயமான சந்தியாவை மணப்பாறையில் போலீசார் இன்று மதியம் மீட்டுள்ளனர். பின்னர் அவரை ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் திருமணத்தை தடுப்பதற்காக தோழி வீட்டுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். 20 வயது மூத்தவரான மணமகனை அவருக்கு பிடிக்காமல் அவர் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் சந்தியா மேஜர் எனபதால் அவரை கட்டாயப்படுத்த கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தியாவின் விருப்பத்தின் பேரில் அவருடைய பெற்றோருடன் ணைப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே வேறு பெண்ணுடன் நிச்சயக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெறும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தெரிவித்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *